Header

Sri Lanka Army

Defender of the Nation

15th September 2018 13:30:46 Hours

கூட்டுப் படை அப்பியாசப் பயிற்ச்சியில் எதிரிகளை தாக்கி பிடிக்கும் பயிற்ச்சி

இராணுவ கூட்டுப் படை அப்பியாசப் பயிற்ச்சியானது தொப்பிகலை மற்றும் மின்னேரிய – கல்ஓயா காடுகளில் கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதிகளில் இடம் பெற்றது. இப் பயிற்ச்சியில் மறைந்திருக்கும் எதிரிகளை எப்படி தாக்கி பிடிப்பதும் எதிரிகளை தாக்குதலில் படையினர் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு மாதிரி ஒத்திகை நடத்தப்பட்டது.

அதன் படி, இப் பயிற்சியில் படையினரின் தன் நம்பிக்கையை மேம் படுத்தும் நோக்குடன் நெகிழ்வான மற்றும் உடனடி பதில்கள் பெற்றுக் கொள்வதற்காக சூடான் இராணுவ படையினர் மற்றும் 4 ஆவது இலங்கை விசேட படையினரின் ஒத்துழைப்புடன் இப் பயிற்ச்சி தெப்பிகலையில் இடம் பெற்றது.

அதேபோல் மின்னேரிய – கல்ஓயா போன்ற காடுகளில் (15) ஆம் திகதி சனிக் கிழமை காலை ஒழிந்திருக்கும் எதிரியை தாக்கி பிடிக்கும் பயிற்ச்சிகள் இடம் பெற்றது.

மேலும் இக் கூட்டுப் படை அப்பியாசப் பயிற்ச்சியில் 2 ஆவது கொமான்டோ படையணியில் 2 குழுவினர்களும், இந்துநேசியா இராணுவத்தின் 3 படையினர்களும் இப் பயிற்ச்சியில் ஈடுபட்டதுடன் டொபர்மென் (Doberman) மற்றும் லயன் செபர்ட் டோக்ஸ் (Lion Shepherd dogs) வழிமுறைகளை பயன்படுத்தி எதிரிகள் கைப்பற்றப்பட்டன.இப் பயிற்ச்சியில் எதிரியின் யிரைக் கைப்பற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம். Sports brands | Archives des Sneakers