Header

Sri Lanka Army

Defender of the Nation

13th September 2018 16:19:17 Hours

மாலி நாட்டின் படைத் தளபதி இலங்கை இராணுவ முகாமுக்கு விஜயம்

ஐக்கிய நாடுகளுக்கான மாலி நாட்டின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜூன் – போல் டெக்கோனின்க் மாலியிலுள்ள இலங்கை கொம்பட் கொன்வே முகாமிற்கு வருகை தந்தார்.

வருகை தந்த படைத் தளபதியை இலங்கை மாலி நாட்டிற்கான ஐக்கிய நாட்டு சமாதான பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் கலான அமுனுபுர அவர்களினால் வரவேற்று இலங்கை இராணுவ அணியினால் அணிவகுப்பு மரியாதைகளும் வழங்கப்பட்டன.

அதன் பின்னர் இலங்கை இராணுவ படை முகாமினுள் மாலி படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன. அதனை தொடர்ந்து மாலி படைத் தளபதியினால் இலங்கை இராணுவ படையணியினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டன.

இறுதியில் இலங்கை இராணுவ படையணியின் கட்டளை அதிகாரி மாலி நாட்டு படைத் தளபதிக்கு நினைவு சின்னத்தை வழங்கி கௌரவித்தார்.Best jordan Sneakers | Nike SB