Header

Sri Lanka Army

Defender of the Nation

11th September 2018 15:11:52 Hours

இலேசாயுத காலாட் படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட தடகள போட்டிகள்

இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட படையணிகளுக்கு இடையிலான் தடகள போட்டிகள் அநுராதபுர பொது மைதானத்தில் செப்டம்பர் மாதம் 3 – 4 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே,ஆர் குலதுங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் இலேசாயுத காலாட்படையணியில் உள்ள 22 படையணிகள் இந்த போட்டிகளில் பங்குபற்றிக்கொண்டன.

மேஜர் ஜெனரல் ஜே.ஆர் அம்பேமொஹட்டி அவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி இந்த போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இந்த போட்டிகளின் இறுதி நாள் பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜே.ஆர் குலதுங்க அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

இந்த போட்டிகளில் திறமையான தடகள விளையாட்டு வீரனாக லான்ஸ் கோப்ரல் கே.ஜி.ஜி ஏகநாயக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். Sports brands | New Balance 991 Footwear