Header

Sri Lanka Army

Defender of the Nation

11th September 2018 14:11:52 Hours

64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கிரிக்கட் போட்டிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பிரதேசத்தில் கடமை புரியும் இராணுவத்தினருக்கு டி20 கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றன.

இந்த போட்டிகள் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை 64 ஆவது படைப் பிரிவின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.

64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவ படையணிகளைச் சேர்ந்த 15 அணியினர் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இறுதிச் சுற்றுப் போட்டிகள் 26 கஜபா படையணி மற்றும் 25 ஆவது தேசிய பாதுகாப்பு படையணிக்கு இடையில் இடம்பெற்ற இடையில் 26 கஜபா படையணி திறமையாக விளையாடி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டிகள் (8) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

போட்டியில் தொடர் விருது நாயகனாக 26 ஆவது கஜபா படையணியின் கெப்டன் டி.டீ.என் திசாகேயும், துடுப்பாட்ட வீரனாக 25 தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த சாஜன் டீ.எம் திசாநாயகவும், சிறந்து பந்து வீச்சாளராக 26 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் எஸ்.சி.எல் சில்வா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். affiliate link trace | シューズ