Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2018 19:16:00 Hours

வறட்சியால் வாடும் பிரதேச வாசிகளுக்கு இராணுவத்தினரால் குடிநீர் வசதிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57, 571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வறட்சியால் வாடும் பாரதிபுர பிரதேச வாசிகளுக்கு குடிநீர் வசதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாரதிபுரத்தைச் சேர்ந்த 350 குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் பவுசர் மற்றும் தண்ணீர் டாங்கிகள் மூலம் இந்த நீர்களை (1) ஆம் திகதி சனிக் கிழமை வழங்கி வைத்துள்ளனர்.

அத்துடன் பாரதிபுரம் பாடசாலை மற்றும் அன்னை கனிஷ்ட வித்தியாலயங்களுக்கும் இந்த குடிநீர் வசதிகளை இராணுவத்தினர் வழங்கியுள்ளனர். Adidas footwear | New Balance 991 Footwear