Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2018 16:32:23 Hours

சிரேஷ்ட பிரிகேடியர் மூவர் பதவி உயர்வு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் படைத்துறைகளின் முனைஞரும் பிரதானியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதியினால் சிரேஷ்ட தரத்தில் இருக்கும் பிரிகேடியர் மூவர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த பதவியுயர்வு வியாழக் கிழமை (6) ஆம் திகதி இராணுவ செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ளன. இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எச்.பி செனவிரத்ன, இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எச்.ஜே செனவிரத்ன இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஆவர். அடுத்தது இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் டப்ள்யூ.ஏ.என்.எம் வீரசிங்க போன்ற அதிகாரிகள் இந்த தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டனர்.

மேஜர் எச்.பி செனவிரத்ன தற்பொழுது இராணுவ தலைமையகத்தின் இராணுவத் தலைமையகத்தில் தர உத்தரவாதம் மற்றும் ஆய்வு பணிப்பாளராகவும், மேஜர் ஜெனரல் எச்.ஜே செனவிரத்ன மாதுறுஓயா இராணுவ பயிற்சி முகாமின் கட்டளை தளபதியாக கடமை வகிக்கின்றார்.

மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஏ.என்.எம் வீரசிங்க பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ தொடர்பு அதிகாரியாக கடமை வகிக்கின்றார். இவர்களது பதவியுயர்வு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை இடம்பெற்றது.Running Sneakers Store | New Releases Nike