Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2018 11:47:46 Hours

பூநகிரி பிரதேச பொது மக்களுக்கு இராணுவத்தினரது ஒத்துழைப்புடன நடமாடும் கிளினிக் சேவைகள்

பூநகிரி பிரதேசத்தைச் சேர்ந்த 1000 பொதுமக்களுக்கு 66 காலாட்படை பிரவின் ஏற்பாட்டில் நடமாடும் சிகிச்சை சேவைகள் பூநகிரி மத்திய கல்லூரியில் (2) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்களது வேண்டுகோளையிட்டு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அவர்களினால் இந்த நடமாடும் கிளினிக் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த கிளினிக் இடம்பெற்ற நிலையத்திற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் வருகை தந்து வைத்திய ஆலோசகர்களுடன் உரையாடலையும் மேற்கொண்டார்.

இந்த கிளினிக்கில் நோயாளிகளைப் பதிவு செய்தபின், நோயாளர்களுக்கு ஆலோசனை செயல்முறை தொடங்கியது. ஆலோசக மருத்துவர், தோல் தொடர்பான மருத்துவ ஆலோசகர், சிறுவர் தொடர்பான மருத்துவ ஆலோசகர், பல் மருத்துவர், கண் அறுவை சிகிச்சை மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களின் பங்களிப்புடன் இந்த கிளினிக் சேவைகள் இடம்பெற்றன.

நோயாளர்களுக்கு சிகிச்சைகள் டொக்டர் (பேராசிரியர்) அநுல விஜயசுந்தர அவர்களது தலைமையில் இடம்பெற்றன. bridgemedia | Nike nike dunk high supreme polka dot background , Gov