Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2018 22:22:57 Hours

கூட்டுப்படை ‘நடவடிக்கை நீர்காகம்’ அப்பியாச பயிற்சிகள் மின்னேரியவில் ஆரம்பம்

முப்படையினர் இணைந்து கூட்டாக மேற்கொள்ளும் ‘நடவடிக்கை நீர்காகம்’ அப்பியாச பயிற்சிகள் மின்னேரிய நடவடிக்கை தலைமையகத்தின் அறிவுறுத்தலுடன் (6) ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த அப்பியாச பயிற்சிகளில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 2500 பேரும், கடற்படையினர் 400 பேரும் , விமானப்படையைச் சேர்ந்த 200 பேர் மற்றும் வெளிநாட்டு படைவீரர்கள் 100 பேரும் இணைந்திருந்தனர்.

கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாண திசைகளிலிருந்து இந்த அப்பியாச பயிற்சியின் முதல் நடவடிக்கைகள் (7) ஆம் திகதி ஆரம்பமாகும்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், நைஜீரியா, பாக்கிஸ்தான், ரஷ்யா, சிங்கப்பூர், சூடான், துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சாம்பியா போன்ற நாடுகளிலிருந்து பாதுகாப்பு தரப்பினர் இந்த பயிற்சிகளுக்காக வருகை தந்துள்ளனர்.

இந்த அப்பியாச பயிற்சிகளினூடாக 20 விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் அப்பியாச பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, கொமாண்டோ படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த ஞானரத்ன மற்றும் விஷேட படையணியின் கட்டளை தளபதி கேர்ணல் உபுல் இகலஹே போன்ற அதிகாரிகளின் தலைமையில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பயிற்சிகளின் இறுதி நிறைவு நிகழ்வு குச்சவெளி பிரதேசத்தில் 'சிக்கலான ஈடுபாட்டில் படையினரது முகங்கொடுக்கும் நடவடிக்கை கண்காட்சிகளுடன் செப்டம்பர் 26 ஆம் திகதி நிறைவு பெறும். Buy Kicks | Buy online Sneaker for Men