Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2018 22:26:27 Hours

வலிகாமத்தில் 4.4 ஏக்கர் இடம் இராணுவத்தினரால் விடுவிப்பு

யாழ்ப்பாண மேற்கு பிரதேச செயலகத்திற்குரிய வலிகாமம் பிரதேசத்தில் 4.4 ஏக்கர் இடங்கள் இராணுவத்தினரால் (6) ஆம் திகதி காலை யாழ் மாவட்ட செயலாளர் என் வேதநாயகம் அவர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதியினால் உத்தியோகபூர்வமான கையளிக்கப்பட்டன.

இந்த இடங்களில் மைலடி கலைமகள் வித்தியாலயம் இருந்த 2.75 ஏக்கர் நிலங்களும், சண்டிலிப்பாய் பொதுமக்களது 1.19 ஏக்கர் நிலங்கள் மற்றும் குறும்பச்செட்டி கூட்டுறவு நிலையம், சமூச நிலையம் காணப்பட்ட 0.5 ஏக்கர் நிலங்களும் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வின் போது யாழ் பிரதேசத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 200 பேருக்கு இராணுவத்தினரது ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

அத்தருணத்தில் யாழ் மாவட்ட செயலாளர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் அவர்களினால் இராணுவத்திற்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் என் வேதநாயகம், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, தெல்லிப்பளை பிரதேச செயலாளர், யாழ் மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர், 513, 515 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள் பங்கேற்றுக் கொண்டனர். jordan release date | New Releases Nike