Header

Sri Lanka Army

Defender of the Nation

01st September 2018 22:38:26 Hours

பாகிஸ்தானிய காலாட்படை அதிகாரிகள் இராணுவத் தளபதியவர்ளை சந்திப்பு

பாகிஸ்தானிய இராணுவத்தின் உயர் அதிகாரிகளான நால்வர் பாகிஸ்தான் இராணுவ காலாட் படையணி பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அபித் ரபீக் அர்களின் தலைமையிலான குழுவினர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த சனிக் கிழமை (01) இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

இவ்வாறு வருகை தந்த பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகளை இலங்கை இராணுவ காலாட் படையணியின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலான அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் வைத்து வரவேற்றனர்.

இச் சந்திப்பின் போது இராணுவத் தளபதியவர்கள் மற்றும் இக் குழுவினரிடையே இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்கம் ஒருமைப்பாடு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இவ் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமையன்று (31) இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இச் சந்திப்பில் இராணுவ பயிற்சிகள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சியவர்கள் மற்றும் காலாட் படையணிப் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலான போன்றௌரும் கலந்து கொண்டனர். spy offers | nike