29th August 2018 09:39:52 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தேவன்பிடி பாலர் பாடசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் (22) ஆம் திகதி புதன் கிழமை மேற்கொள்ளப்பட்டன.
பாடசாலை நிர்வாக சபையினர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய 19 ஆவது விஜயபாகு காலாட்படையணியினர் இந்த சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.
65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய 651 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ரஞ்ஜித் அபேசிங்க அவர்களது மேற்பார்வையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. buy shoes | Marki