Header

Sri Lanka Army

Defender of the Nation

29th August 2018 00:20:11 Hours

இராணுவ தளபதி தலதா மாளிகைக்கு கௌரவ மரியாதை தெரிவிப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் அவரது பாரியார் திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்கள் ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்று புத்தபெருமானின் புனித தந்தங்களை தரிசித்து அவர்கள் புத்த பெருமானின் ஆசர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.

இவர்கள் (24) ஆம் திகதி இடம்பெற்ற ரந்தோலி பெரஹர போயா தினத்தன்று ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்றிருந்தனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை இடம்பெற்ற எசல பெரஹரவிற்கு 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார அவர்களது தலைமையில் இராணுவத்தினரால் பாரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டன.

மேலும் இராணுவ தளபதி தலதா மாளிகையின் நிர்வாக பிரதானியான தியவதன நிலமி நிலங்க தெல பண்டார அவர்களையும் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இராணுவ தளபதி நேரடி தொலைக்காட்சி நேர்காணலிலும் பேட்டியளித்தார். அதன் போது அவர் இராணுவம் மற்றும் தேசிய கட்டிடத்திற்கான தனது திட்டங்களை வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது 2 ஆவது தொண்டர் சிங்கப் படையணியினால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டன. affiliate tracking url | Asics Onitsuka Tiger