Header

Sri Lanka Army

Defender of the Nation

27th August 2018 20:59:41 Hours

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி இராணுவ அதிகாரிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

இந்திய பிரதான பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்.சி மொஹோட்டியின் தலைமையில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த 14 இந்திய இராணுவ அதிகாரிகள் (26) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

வருகை தந்த இந்த இராணுவ அதிகாரிகள் (27) ஆம் திகதி திங்கட் கிழமை இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையக பணிமனையில் உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.

இச் சந்திப்பின் போது 2018 ஆம் ஆண்டு இடம்பெறும் ‘ கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு – ’ , இராணுவ கல்விகள் தொடர்பாகவும் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அத்துடன் இலங்கை இராணுவ பயிற்சி பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர வன்னியாரச்சி அவர்களினால் வருகை தந்த அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவத்தின் தற்போதைய பாத்திரங்கள் மற்றும் பணிகள் தொடர்பான விளக்கங்களையும் விளக்கினார்.

மேலும் இந்த அதிகாரிகள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இலங்கை விமானப்படைத் தலைமையகம், இலங்கை கடற்படைத் தலைமையகம், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படைத் தலைமையகத்திற்கும் சுற்றுலாவை மேற்கொள்ள உள்ளனர்.

இலங்கையின் வெளிநாட்டு உறவுகள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள், விடுதலைப் புலிகள் மற்றும் அதன் மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் இலங்கையால் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த அதிகாரிகள் கல்வி சுற்றுலாவை மேற்கொண்டுள்ளனர். latest Running | Gifts for Runners