25th August 2018 10:30:27 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலையில் அமைந்துள்ள ஶ்ரீ ரேவத சிறார் நிலைய பிள்ளைகள் அநுராதபுரத்திற்கு கல்வி சுற்றுலாவை (19) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மேற்கொண்டனர்.
திருகோணமலை ரேவத சிறார் நிலையத்தின் பிரதான பராமரிப்பாளர் அவர்களினால் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களிற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த சிறார்களுக்கு இந்த கல்வி சுற்றுலா ஒழுங்குகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிறார்கள் அநுராதபுரத்தில் அமைந்துள்ள புராதான புனித விகாரைகளான ஶ்ரீ மஹா போதிய, ருவன்வெலி மஹாசேய, ஜதவனராமய, லொவம்அஹபாய, மிரிஸ்ஸவெடிய, துபரமாய, குட்டம் கேணி, லங்காராமய, அப்ஹாயகிரிய, சமதி புத்த சிலை மற்றும் இசுறுமுனிய போன்ற இடங்களை பார்வையிட்டனர்.
இந்த கல்வி சுற்றுலாவில் 30 சிறார்கள் மற்றும் 4 பராமரிப்பாளர்கள் இணைந்திருந்தனர். jordan Sneakers | Nike Running