24th August 2018 08:50:23 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 652ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் வந்தித்த மஹிங்கந்த அவர்களின் வழிகாட்டலின் கீழ் 652ஆவது படைப் பிரிவினரால் மனிதாபிமான நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் அனவிழந்தகுளப் பிரதேசத்தில் மிகவும் வறிய சூழலில் காணப்பட்ட முதியவர் ஒருவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு மற்றும் கழிப்பறை போன்றன நிர்மானித்து வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கணவனை இழந்த இப் பெண்மனியான திருமதி முத்துசாமி தெய்வானை அவர்களுக்கு இப் புதிய வீடு மற்றும் கழிப்பறை போன்றன படையினரால் நிர்மானித்து வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் 65ஆவது படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் டபிள்யூ ஏ கே குமாரப்பெரும மற்றும் 652ஆவது படைப் பிரிவினர் போன்றோர் கலந்து கொண்டு கடந்த சனிக் கிழமை (18) இவ் வீட்டை இம் மூதாட்டிக்கு கையளித்தனர். Asics shoes | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf