24th August 2018 08:45:51 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார அவர்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவிற்கான பாதுகாப்பு ஒழுங்குகளை கண்காணிக்கும் பொருட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (19) இக் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.
அந்த வகையில் 11ஆவது படைப் பிரிவானது இப் பண்டிகை நிகழ்விற்கான பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொலிஸ் அதிகாரிகளுடனும் மற்றும் சக நிர்வனங்களுடன் இணைந்து பாதுகாப்பை வழங்கவுள்ளது.
இதன் போது இங்கு காணப்படுகின்ற சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பை இவ் அதிகாரியவர்கள் மேற்கொண்டார். அத்துடன் தலதா மாளிகைல் சேவையில் காணப்பட்ட படையினரையும் கண்காணித்தார். Authentic Nike Sneakers | Nike