Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd August 2018 09:06:47 Hours

புதிதாக நியமிக்கப்பட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியவர்கள் இராணுவத் தளபதியவர்களை சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவரான திரு லோகஸ் பெட்ரிஸ் அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநயக்க அவர்களை கடந்த செவ்வாய்க் கிழமை (21) சந்தித்து வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணக்க ஒருங்கிணைப்பு திட்டங்கள் போன்றவை தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

அந்த வகையில் இலங்கையில் ஆகஸ்ட் 6ஆம் திகதியன்று தமது உத்தியோகபூர்வ கடமைப் பொறுப்பை ஏற்ற திரு பெட்ரிட்ஸ் அவர்கள் இராணுவத் தளபதியவர்களை இராணுவத்; தலைமையகத்தில் சந்தித்து இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகக் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் இராணுவத் தளபதியவர்கள் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் சுகாதர மேம்பாட்டு திட்டங்கள் சமூக நலத் திட்டங்கள் விவசாயவியல் மற்றும் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதென அவர் தெரிவித்ததுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் எதிர்கால திட்டங்களுக்கு தாம் இராணுவத்தினரின் சார்பில் உதவுவதாகக் தெரிவித்தார். latest Nike Sneakers | Air Jordan