21st August 2018 08:56:24 Hours
அம்பேபுஸ்ஸையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சிங்க படையணி தலைமையகத்தில் மரணித்த வீரர்களை நினைவு படுத்தி இவர்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒகஸ்ட் 18 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டனர்.
இலங்கை இராணுவ சிங்க படையணி தலைமையகத்தின் கட்டளை தளபதியான பிரிகேடியர் ஏ.பி பால்லவெல அவர்களின் அழைப்பின் பேரில் பிரதான அதிதியாக இராணுவ சிங்க படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பியால் விக்ரமரத்ன அவர்கள் வருகை தந்தார்.
இந் நிகழ்வானது தொடர்ந்து 29 வருடங்களாக ஏற்பாடு செய்வதுடன் இலங்கை இராணுவ சிங்க படையணியில் அமைந்திருக்கும் இந் நினைவு சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்காக 143 இராணுவ அதிகாரிகள் மற்றும் 3719 படையினர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். நாட்டிட்காக உயர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் உறவினர்கள், அன்புக்குறிய துணைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட பெரும் திரலான மக்கள் கலந்து கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து படைப்பிரிவின் கட்டளை தளபதியவர்கள் போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு அவற்றின் தேவைகள் பற்றியும் விசாரித்தார். அத்துடன் அனைத்து மரணித்த வீரர்களுக்கும் சிறப்பு பரம வPர விபூஷண பதக்கங்களும் வழங்கினார்.
பிற்பகல் பெளத்த கத்தோலிக்க இந்து மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளை பிரதிநிதித்துவப்படுதி மத வழிப்பாடுகள் வரக்காபொல மற்றும் புனித இடங்களில் இடம் பெற்றதுடன் (19) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவில் பிரித் பூஜையும் வழிப்பாடும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இராணுவ சிங்க படையணியின் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்களும்ய கலந்து கொண்டனர். Nike footwear | Men's Footwear