Header

Sri Lanka Army

Defender of the Nation

19th August 2018 10:30:47 Hours

திருகோணமலை சிவில் விளையாட்டு கழகத்தினருடன் இராணுவ காற்பந்தாட்ட வீரர்கள் இணைந்து காற்பந்தாட்ட போட்டிகள்

திருக்கோணமலையில் அமைந்துள்ள 221 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பிரதேச இளைஞர்களுக்கிடையில் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதன் நோக்குடன் 22 ஆவது படைப் பிரிவின் கால்பந்து அணியினருக்கும் திருகோணமலை பிரதேச கவர்ஸ்ட் விளையாட்டு கழகத்தினருக்கும் இடையே கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. ஆந்த வகையில் இப் போட்டியானது கடந்த (12) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கோணமலை போர்ட் ஃபெட்ரிக் மைதானத்தில் இடம் பெற்றது.

அதன் படி இரு அணிகளும் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தீவிரமாக விளையாடின. ஆனலும் இரு அணியினரும் 2 கோல்களை அடித்து நேருக்கு நேருக்கு நின்றது. எனினும் 22 ஆவது படைப்பிரிவின் அணி இறுதியில் பெனால்டி கோல் மூலம் போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியானது 22 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் வழிகாட்டலிற்ககைமய 221 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் டி.பி.யூ குணசேகர அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆத்துடன் இப்பிரதேசத்தில் உள்ள பல இளைஞர்கள் இப் போட்டியை பார்;வையிட கலந்து கொண்டனர். Nike footwear | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1