Header

Sri Lanka Army

Defender of the Nation

19th August 2018 11:12:47 Hours

விவசாயிகளுக்கான நீர்பாசக் குளக் கட்டுகள் படையினரால் மீள் திருத்தம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் 651ஆவது படைப் பிரிவினரால் இப் பிரதேச விவசாயிகளின் காரியலனகபட்டுவன் குளக் கட்டானது இப் படையினரால் முற்றாக சுத்திகரிக்கப்பட்டு மீள் திருத்தப்பட்டு வழங்கப்பட்டது.

அந்த வகையில் 651ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரகேடியர் ரஞ்சித் அபேசிங்க அவர்களிடம் இவ் விவசாயிகள் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கான சிரமங்களை முன்வைத்து இவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இப் படையினரால் இக் குளக் கட்டு சுத்திகரித்து வழங்கப்பட்டது.

மேலும் 11ஆவது கஜபா படையணியின் ஒரு அதிகாரி மற்றும் இருபத்து ஐந்து படையினர் அத்துடன் 15 விவசாயிகள் போன்றோர் ஒன்றினைந்து கடந்த செவ்வாய்க் கிழமை (14) சிரமதானப் பணிகளை முன்னெடுத்ததுடன் 65ஆவது படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களின் தலைமையில் 651ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் கண்காணிப்பிலும் இடம் பெற்றது. latest jordan Sneakers | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival