Header

Sri Lanka Army

Defender of the Nation

07th August 2018 14:25:45 Hours

விஷேட காலாட் நடவடிக்கை பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்

மாதுறு ஓயா இராணுவ பயிற்சி முகாமில் விஷேட காலாட் நடவடிக்கை பயிற்சிகளை நிறைவு செய்த 13 இராணுவ அதிகாரிகள் மற்றும் 143 படை வீரர்களது பயிற்சி நிறைவு வெளியேறும் நிகழ்வு (7) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ காலாட் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பஸ்நாயக அவர்கள் வருகை தந்தார்.

இவரை காலாட் பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரியான லெப்டின ன்ட் கேர்ணல் ஏ.டி.எஸ் ஹென்னதிகே அவர்கள் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையுடன் வரவேற்றார்.

இந்த பயிற்சியில் அனைத்து துறைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற அதிகாரியாக 19 விஜயபாகு காலாட் படையைச் சேர்ந்த லெப்டினன்ட் எல்.எல்.கே.எம் அல்விஸ் அவர்களும், சிறந்த படை வீரனாக 19 ஆவது கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஏ.பீ.ஐ விஜயசேன அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். Sport media | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival