Header

Sri Lanka Army

Defender of the Nation

15th August 2018 10:17:12 Hours

பொறியியலாளர் படையினரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசு நிகழ்ச்சி திட்டம்

‘தஹம் பஹன’ அமைப்பின் சால்ஸ் தோமஸ் சகோதரரின் அனுசரனையில் யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது அழைப்பையேற்று இந்த நிகழ்விற்கு சால்ஸ் தோமஸ் சகோதரர் வருகை தந்தார். இவரை இராணுவ தளபதி மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்கள் வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவ, மாணவிகள் 100 பேருக்கு புலமைப்பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்குகள் ஏற்றப்பட்டு பின்னர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவ பொறியியலாளர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் இந்த நிகழ்வில் வாழத்துறை நிகழ்த்தப்பட்டன.

இந்த நிகழ்வு (14) ஆம் திகதி மாலை பனாகொடையில் அமைந்துள்ள இராணுவ பொறியியலாளர் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.

புலமைப்பரிசு திட்டத்தின் கீழ் சகோதரர் சால்ஸ் தோமஸ் அவர்கள் இம் மாணவர்களின் கல்வி தராதரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த உதவிகளை மேற்கொண்டார்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் அவரது பாரியார் திருமதி சேனாநாயக அவர்கள் சகோதரர் சால்ஸ் தோமஸ் அவர்களின் இந்த செயற்பாட்டிற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா அதிகாரிகளும் பங்கேற்றுக் கொண்டனர். Running sports | GOLF NIKE SHOES