Header

Sri Lanka Army

Defender of the Nation

14th August 2018 14:25:55 Hours

இராணுவத்திலிருந்து ஓய்வூ பெற்று செல்பவர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சி திட்டம்

சாலியவெவ கலாஓயா இராணுவ தொழில் பயிற்சி மையத்தில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவத்தினருக்கு பயிற்சிகள் இடம்பெற்றன.

இராணுவத்திலுள்ள ஆறு படைத் தலைமையகங்களைச் சேர்ந்த படையினருக்கு இந்த பயிற்சிகள் ஜூலை மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை இடம்பெற்றன.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம்,மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினருக்கே இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் விரிவுரைகள் லெப்டினன்ட் கேர்ணல் வி.டீ.எஸ் பெரேரா, மேஜர் யூ.எல்.என்.டீ.கே லியனகே அவர்களால் நிகழ்த்தப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 243 பேரும், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 310 பேரும், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 112 பேரும், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 152 பேரும், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 298 பேரும், இந்த பயிற்சிகளை மேற்கொண்டனர்.

முழுமையாக 356 இராணுவத்தினர் இந்த பயிற்சிகளை மேற்கொண்டனர். short url link | Nike Releases, Launch Links & Raffles