13th August 2018 13:44:27 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் குறைந்த வருமானத்தை பெறும் ஸ்கந்தபுர பிரதேச பொது மக்களுக்கு (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களது எண்ணக்கருவிற்கமைய 652 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் வந்தித்த மஹின்கந்த அவர்களின் பங்களிப்புடன் ஸ்கந்தபுர ஜிடிஎம் பாடசாலையில் இடம்பெற்றன.
அத்துடன் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 50 பேருக்கும் பாடசாலை உபகரணங்களும் இந்த நிகழ்வின் ஊடாக நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுகள் 20 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் முழுமையான ஒத்துழைப்புடன் இடம்பெற்றன. Sports brands | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta