Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2018 06:09:54 Hours

தியதலாவை இராணுவ கெடெற் அதிகாரிகள் முல்லைத்தீவிற்கு சுற்றுலா பயணம்

இலங்கை இராணுவ எகடமியில் அதிகாரி தரத்தில் பயிற்சியை பெறும் 58 கெடெற் அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு (8) ஆம் திகதி சுற்றுலாவை மேற்கொண்டனர்.

இங்கு வருகை தந்த கெடெற் அதிகாரிகளை முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் டப்ள்யூ.டீ.சி.கே கொஸ்தா அவர்கள் வரவேற்றார். பின்பு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்துஷ்யந்த ராஜகுரு அவர்களை சந்தித்தார். பின்னர் தளபதியினால் இவர்களுக்கு இராணுவம் தொடர்பான சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான லெப்டினன்ட் கேர்ணல் டி.கே..டீ தர்மசேன, மேஜர் எஸ்.எம்.சி.என் சமரகோன், அவர்களினால் விரிவுரைகள் இந்த கெடெற் அதிகாரிகளுக்கு நிகழ்த்தப்பட்டன.

முல்லைத்தீவில் இறுதி மனிதாபிமான நடவடிக்கைகளில்ஈடுபட்ட 1 ஆவது இலங்கை இலேசாயித காலாட் படையின் கட்டளை அதிகாரி மேஜர் கே.ஏ.கே. கருணாரத்ன மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரியான மேஜர் கே.பீ.சி.கே. காரியவசம், அவர்களையும் இந்த கெடெற் அதிகாரிகள் சந்தித்தனர். Nike Sneakers | Men’s shoes