Header

Sri Lanka Army

Defender of the Nation

07th August 2018 13:51:27 Hours

படையினரால் கிளிநொச்சி தெங்கு பயிர்ச்செய்கைக்காக இலவச உரம் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பரிவின் கீழ் இயங்கும் 661 ஆவது படைப் பரிவில் பணிப்புரியும் 5 ஆவது இயந்திர காலாட் படையணியினரால் மீரிகம சில்வர் மில்க் நிறுவனத்தினரின் ஒத்துழைப்புடன் தெங்கு பயிர் செய்கைக்கான உரம் மற்றும் தெங்கு கன்றுகளும் கடந்த (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று பூனரியில் உள்ள குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன் 66 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலகே அவர்களால் மேற் கொள்ளப்பட்ட முன் முயற்ச்சியை தொடர்ந்து பிரதேச தெங்கு அபிவிருத்திச் சபைக்கான முகாமையாளர் திரு. விஜயநாதன் உதவி முகாமையாளர் திரு. எஸ் கருணாஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் அரசபுரகுளம் பட்டலியன் பயிற்ச்சி முகாம் வளாகத்தில் இடம் பெற்றதில் மீரிகம சில்வர் மில்க் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அத்துடன் பிரதேச தெங்கு அபிவிருத்தியின் உதவி முகாமையாளர் திரு.எஸ் கருணாஸ் மற்றும் தெங்கு அபிவிருத்தி வாரிய அதிகாரிகளில் ஒருவரான திரு. எஸ். சத்தியநாதன் அவர்களால் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த வருவாய்க்காகவும் எவ்வாறு தேங்காய் நாற்றுகளை வளர்க்க முடியும் என்றும் உரங்களின் சிறந்த பயன் பற்றி சுருக்கமான விரிவுரைகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு 661 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் பியந்த ஜயவர்தன சிவில் விவகார அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட்ட அதிகாரிகளும் படையினரும் கலந்து கொண்டனர். Nike sneakers | jordan Release Dates