Header

Sri Lanka Army

Defender of the Nation

06th August 2018 10:22:21 Hours

‘கொமாண்டோ செலஞ்’ 2018 ஆம் ஆண்டு கார், மோட்டார் சைக்கிள் போட்டிகள்

இராணுவ கொமாண்டோ படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான ‘கொமாண்டோ செலஞ்’ போட்டிகள் (5) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை குடா ஓயாவில் இடம்பெற்றது.

‘ஶ்ரீ லங்கா அசோசியேஷன் ரேஷிங் ட்ரயிவர்ஸ் என்ட் ரயிடர்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் சுபர் குரோஸ் போட்டிகள் துடுகெமுனு விளையாட்டு திடலில் இடம்பெற்றன, இப் போட்டிகளில் 12 ரேசிங் கார்கள் , 10 மோட்டார் சைக்கிள்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது அழைப்பையேற்று வருகை தந்தார்.

இப்போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் நிதிப் பரிசுகளையும் இராணுவ தளபதி வழங்கி வைத்தார்.

best Running shoes | Mens Flynit Trainers