Header

Sri Lanka Army

Defender of the Nation

06th August 2018 14:22:21 Hours

காலாட் பயிற்சி மத்திய நிலையத்திற்கு புதிய வசதிகள்

இராணுவ காலாட் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சுராஜ் பஸ்நாயக அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (4) ஆம் திகதி சனிக் கிழமை வருகை தந்தார்.

புதிய கட்டமைப்புகளில், சிறிய ஆயுதங்களுக்கான தொகுப்பு மற்றும் ஆதரவு ஆயுதமேந்திய காட்சியகம், இராணுவ தளபதியின் விஜயத்தின் போது திறந்து வைக்கப்பட்டது. இந்த காட்சியகத்தில் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த பரந்த அளவிலான ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பின்னர், இராணுவ தளபதி அவர்களினால் சாஜன் மற்றும் கோப்ரல் விடுதிகள் ரிபன்கள் வெட்டி திறந்து வைக்கப்பட்டன.

காலாட் பயிற்சி மத்திய நிலையத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதைகள் செலுத்தி வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் இராணுவ தளபதியினால் இந்த பயிற்சி நிலையத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.

இராணுவ தளபதி பின்னர் பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல , இராணுவ கட்டளை பயிற்சி தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்கள் கலந்து கொண்டனர். latest jordans | Nike SB