24th July 2018 13:52:58 Hours
இராணுவத்தில் புதிதாக மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்ட பாத்திய தவுலகல அவர்களுக்கு சாலியபுரையில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்புகள் (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன.
படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் பாத்திய தவுலகல அவர்களை கஜபா படையணியின் பிரதி கட்டளை தளபதி கேர்ணல் ஹரிந்திர பீரிஸ் அவர்கள் வரவேற்றார்.
பின்னர் இவர் கஜபா படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள காலஞ் சென்ற மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களது நினைவுச் சிலைக்கு முன்னாள் சென்று மரியாதைகளை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து படைத் தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டு படை வீரர்களுடன் உரையாடலையும் மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர். Running sports | Sneakers