Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd July 2018 16:27:59 Hours

இராணுவத்தினரால் பாடசாலை கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புகளுக்கான ஒத்துழைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ரோயல் பெயின்ட் லங்கா தனியார் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சஞ்ஜீவ பெர்ணாண்டோ அவர்களின் அனுசரனையில் வவுனியா ஶ்ரீ கிருஸ்னா வித்தியாலய பாலர் பாடசாலையின் பிரதான நுழைவாய் கதவு மற்றும் இப்பாலர் பாடசாலையின் சின்னத்தம்பனி சிறுவர் பூங்கா நிர்மானிக்கப்பட்டன.

இந்த கட்டுமான திறப்பு விழா (17) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.

நுழைவாயில் மற்றும் முன் பள்ளி தேவைகள் இருந்தபோதும் நிதி இல்லாததா காரணத்தினால்பாடசாலை நிர்வாகத்திற்கு இந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளமுடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. அச் சமயத்தில் 61 ஆவது படைப் பிரிவினால் இந்த பணிகளுக்கு முழு முய்ற்சி எமக்கு வழங்கப்பட்டதாக பாடசாலை நிர்வாகத்தனர் தெரிவித்தனர்.

இந்த திறப்பு விழா நிகழ்விற்கு 611 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் சமன் லியனகே, ஓமந்தை கல்வி வலய அதிகாரி சசிகுமார் மற்றும் ஶ்ரீ கிருஸ்னா வித்தியாலய அதிபர் சுதாகரன் அவர்களும் இணைந்திருந்தனர்.

Sport media | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret