Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2018 10:27:24 Hours

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு கருத்தரங்கு நிகழ்ச்சி திட்டம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 மற்றும் 224 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இம்முறை 2018 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மூதூர் அல் ஹயிதயா மஹா வித்தியாலயத்தில் ஜூலை மாதம் 17, 18 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இந்த கருத்தரங்குகள் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் மூதூர் கல்வி வலய பணிப்பாளரின் ஒத்துழைப்புடன இடம்பெற்றன.

கருத்தரங்கு ஆரம்ப நிகழ்விற்கு 22 ஆவது படைத் தளபதி, மூதூர் கல்வி வலய பணிப்பாளர் மற்றும் அதிதிகள் வருகை தந்து அனைத்து சமய மதகுருமாரது ஆசிர்வாதத்துடன் மங்கள விளக்குகள் ஏற்றி இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

சிறந்த ஆசிரியர்களான ஏ.எம்.எல் சாதாக், எம்.எம் இஸ்ஹாம் அவர்கள் இந்த கருத்தரங்கில் விரிவுரைகளை ஆற்றினர். அத்துடன் ஆறு பாடசாலையைச் சேர்ந்த 185 பாடசாலை மாணவர்கள் இந்த கருத்தரங்கிற்கு சமூகமளித்தனர்.

கருத்தரங்கிற்கு வருகை தந்த மாணவர்களுக்கு 24 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினால் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்விற்கு மூதூர் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எஸ் எம் இக்பால், இராணுவ லொஜஸ்டிக் பயிற்சி கல்லூரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் தீபால் வன்னியாரச்சி, 224 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் பிரசன்ன எதிரிவீர, மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்வி திணைக்கள அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

Sports Shoes | nike fashion