21st July 2018 14:53:45 Hours
ஜீ.சி 2018 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மடு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கருத்தரங்குகள் பெரிய பண்டிபிரிச்சான் மஹா வித்தியாலயத்தில் ஜூலை மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
இந்த கருத்தரங்குகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 61 மற்றும் 613 ஆவது படைத் தலைமையகத்தின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.
உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 36 பாடசாலை மாணவர்களுக்கு பயண்பெறும் வகையில்இந்த கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
அத்துடன தமிழ் மொழி, இந்து கலாச்சாரம், புவியியல், கணக்கியல், பொருளாதாரம் மற்றும் வியாபார ஆய்வின் மீதான விவாதங்கள் இந்த கலந்துரையாடலில் போது இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயம்பதி திலகரத்ன, 613 ஆவது படைத் தளபதி கேர்ணல் ஆர்.கே.என்.சி ஜயவர்தன, உயர்தர பிரதி பணிப்பாளர் ஏ.லோகேஷ்வரன், பாடசாலையின் அதிபர் எஸ். ராஜரத்னம், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். Nike shoes | Sneakers