Header

Sri Lanka Army

Defender of the Nation

21st July 2018 19:53:45 Hours

இராணுவத்தினருக்கு டெங்கு நோய் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய பனாகொடையில் அமைந்துள்ள 1 ஆவது இலங்கை தரைப்படை போர் கருவிச் சிறப்பணி கேட்போர்கூடத்தில்இராணுவத்தினருக்கு டெங்கு நோய் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு புதன் கிழமை(18) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த தெளிவூட்டல் நிகழ்வில் கொழும்பு மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் சமன் பதிரன, ஹோமாகம வைத்திய அதிகாரி டொக்டர் ஜகத் குமார , ஹோமாகம பிரதி வைத்திய அதிகாரி டொக்டர் சுதேஷ் பரணயாபா மற்றும் டொக்டர் சுபாசினி ஆரியபெரும போன்ற வைத்திய அதிகாரிகள் படையினருக்கு டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.

இராணுவ அதிகாரிகள் 35 பேரும், படை வீரர்கள் 155 பேரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Sports Shoes | Air Jordan