19th July 2018 11:54:13 Hours
ஊவா மாகாண நிர்வாக முகாமையாளர் சங்கத்தினரின் வேண்டு கோளுக்கிணங்க இராணுவ அதிகாரிகள் உட்பட 52 படையினரும் இணைந்து பண்டாரவெல வைதியசாலையின் நோயாளர்களின் நலன் கருதி பண்டாரவெல புஷ்பராம விஹாரையில் (17) ஆம் திகதி செவ்வாய்கிழமை இரத்தம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
நோயாளிகளின் வாழ்க்கையின் மதிப்பை மேம்படுத்தும் நோக்குடன் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களால் இந்த திட்டத்திற்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த இரத்தம் தானம் வழங்கும் நிகழ்வானது பண்டாரவெல வைத்தியசாலையின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து படையினர்களுக்கும் ஏற்பாடு குழுவினர்கள் நன்றியை தெரிவித்துகொண்டனர். Best Sneakers | Air Jordan