Header

Sri Lanka Army

Defender of the Nation

17th July 2018 13:13:09 Hours

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு பணிகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 ஆவது படைப் படைப்பிரிவின் 180 க்கும் அதிகமான படையினர்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு திட்டம் இப் பிரதேசத்தின் மாகண அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் ஜூலி மாதம் 12, 13 ஆம் திகதி ஆம் திகதிகளில் இடம் பெற்றனர்.

நாடெங்கிலும் டெங்கு ஒழிப்பு திட்டத்திட்கு இணையாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனஹே அவர்களின் ஆலோசனைக்கமைய 14 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரூல்ப் நுஹேரா மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதன் பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய படையினரால் டெங்கு அபாயம் ஏற்படும் இடங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து கொண்டனர்.Authentic Sneakers | Men's Footwear