Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2018 15:49:25 Hours

கனடாவிலிருந்து வருகை தந்த யுவதிகளினால் கிளிநொச்சி மாணவர்களுக்கு நன்கொடைகள்

கனடா யூத் அவுட்ரீச் கவுன்சில் அமைப்பின் அனுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கான நன்கொடைகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி பன்னக்கண்டி அரச கலவன் பாடசாலையில் (15) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

571 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் நஜீவ எதிரிசிங்க அவர்களது தலைமையில் சமய ஆசிர்வாத நிகழ்வுடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

85 பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் 600,000/= ரூபாய் செலவில் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவைகளில் காலணிகள், பேனா,பென்சில். பாடசாலை பைகள், விளையாட்டு உபகரணங்கள் ,தண்ணீர் போத்தல்கள், சாப்பாட்டு பெட்டிகள் மற்றும் அலுவலக உபகரணங்கள் ஆகும்.

affiliate link trace | Releases Nike Shoes