Header

Sri Lanka Army

Defender of the Nation

15th July 2018 10:00:17 Hours

போர் வீரனான ஹசலக காமினியின் நினைவு விழா

நாட்டிற்காக தம்மை உயிர் தியாகம் செய்த இலங்கை சிங்கப் படையணியின் கோப்ரல் ஹசலக காமினி குலரத்ன அவர்களது 27 ஆவது ஆண்டு நினைவு விழா ஆனையிறவு அவரது நினைவு தூபி வளாகத்தினுள் ஜூலை மாதம் 13 – 14 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

வெள்ளிக் கிழமை (13) அம் திகதி 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக, 662 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சம்பிக ரணசிங்க அவர்களது தலைமையில் மஹாசங்க தேரர் அவர்களின் பங்களிப்புடன் பௌத்த சமய ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

சனிக் கிழமை (14) ஆம் திகதி இடம்பெற்ற ஹசலக காமினிகே ஆண்டு நினைவு விழாவிற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்விற்கு ஹசலக காமினி அவர்களது தாயாரான திருமதி எஸ்.ஜி ஜூலியட், 66, 662 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதிகளும் வருகை தந்தனர்.

இவரது நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி இராணுவ பீகல் நாத ஓசையுடன் இராணுவ மரியாதைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.jordan release date | Men’s shoes