Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2018 10:48:47 Hours

இராணுவத்தினரது கண்காட்சிகளை பார்வையிடுவதற்கு இராணுவ தளபதி வருகை

இராணுவத்தினரால நிர்மானிக்கப்பட்ட புதிய கண்டு பிடிப்பு பொருட்கள் இராணுவ தலைமையகத்தில் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பணியகத்தின் ஏற்பாட்டில் (10) ஆம் திகதி காலை இடம்பெற்றன.

இந்த கண்காட்சிக்கு இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ரேணுக ரோவல் அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.

புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட 13 நிர்மான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இராணுவ நிறைவேற்று காரியாலயம் மற்றும் இராணுவ ஆளனி பணியகத்தின் பூரண ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடு பூராக உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் உள்ள இராணுவத்தினரால் இந்த நிர்மானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் தடைவையாக இராணுவ தளபதி இந்த கண்காட்சிகளை பார்வையிட்டு இவற்றை நிர்மானித்த படை வீரர்களை பாராட்டினார்.

கவச வாகனங்கள், மென்பொருள் மாதிரிகள், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆளில்லாத வாகனங்களின் உற்பத்தியைக் கொண்ட பீரங்கி துப்பாக்கிகள், சைபர் பாதுகாப்பு விசை-துப்புரவாக்கிகள் மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் மற்றும் சிறிய ஆயுத உருவகப்படுத்துதல்களில் மேம்பாடுகள் , கிளை மூலம் ஆய்வு செய்யப்படும் வெடிபொருட்கள், வெடிமருந்துகள் போன்றவற்றிற்காக தேடலில் எதிர்காலத்திலும் தொழில்நுட்ப தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்படலாம் என்பதை ஒரு சிறிய வீடியோ காட்சி மூலம் விளக்கும் கண்காட்சிகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சிகளின் மூலம் 2017 ஆம் ஆண்டிற்கான தங்கம், வெள்ளி மற்றும் வென்கல பதக்கங்கள் போன்ற விருதுகளையும் எமது படையினர் பெற்றுள்ளனர்.

கண்காட்சியினை பார்வையிடுவதற்கு இராணுவ தளபதி, பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன , பதவி நிலை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

Running sports | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp