12th July 2018 17:03:17 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘தஹம் பஹன’ திட்டத்தின் கீழ் சால்ஸ் தோமஸ் சகோதரர் அமைப்பின் அனுசரனையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வறுமை குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவர்களது பிள்ளைகளான பாடசாலை மாணவர்களுக்கு 100 துவிச்சக்கர வண்டிகளும், குடும்ப அங்கத்தவர்களுக்கு 3000 தென்னங் கன்றுகளும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து (9) ஆம் திகதி புதன் கிழமை வழங்கப்பட்டன.
மேலும் ‘தஹம் பஹன’ அமைப்பின் அனுசரனையில் யாழ் கரப்பன் ஊர்காவற்துறையில் இராணுவத்தின் கட்டிட நிர்மான பணிகளின் மூலம் அமைக்கப்பட்ட புதிய வீடுகளும் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்விற்கு அனுசரனையாளரான சால்ஸ் தோமஸ் சகோதர், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, ‘தஹம் பஹன அமைப்பின் அங்கத்தவர்கள், மத குருமார்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
trace affiliate link | New Balance 991 Footwear