Header

Sri Lanka Army

Defender of the Nation

12th July 2018 18:03:17 Hours

பாத யாத்திரை பக்தர்களை இராணுவ தளபதி சந்திப்பு

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை நிமித்தம் செல்லும் பக்தர்களை யால சரணாலயம், தென்கிழக்கு பிரதேசத்தில் வைத்து (11) ஆம் திகதி புதன் கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் சந்தித்து உரையாடினார். அத்துடன் இராணுவ தளபதியின் தலைமையில் பக்தர்களுக்கு உணவு, குடி நீர்கள்,பழங்கள் தொடுபால, கடுபில்ல, ஆர, லின் துன்ன மற்றும் பாலடுபானவில் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

இராணுவ தளபதி கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்‌ஷ, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ், 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் என். டீ வன்னியாரச்சி, இராணுவ செயலகத்தின் கேர்ணல் உதயகுமார் அடங்கிய குழுவினர் இந்த உலர் உணவு பொருட்களை இந்த பக்தர்களுக்கு வழங்கி வைத்தனர்.

அத்துடன் 23 ஆவது கஜபா படையணியின் ஏற்பாட்டில் அன்னதானமும் இந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்வில் இராணுவ தளபதியும் பக்தர்களுடன் இணைந்து அன்னதானங்களை உண்டார்.

தனிப்பட்ட ரீதியாக கதிர்காமத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு உதவியை வழங்குவது நாட்டிலே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத்தினர் இந்த பணிகளை மேற்கொள்ளுவதாகவும்.

"கதிர்காமத்திற்கு இந்த தனிப்பட்ட பாத யாத்திரையை மேற் கொள்ளும் பக்தர்களுக்கு இந்த உதவிகளை வழங்குவது இராணுவத்தினர் நாட்டை மட்டும் பாதுகாப்பது எமது கடமை அல்ல, நாட்டிலே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத்தினர் இந்த பணிகளை மேற்கொள்ளுவதாக இராணுவ தளபதி அங்கு வந்த ஊடகவியலாளருக்கும் தனது கருத்தை தெரிவித்தார். Authentic Nike Sneakers | Buy online Sneaker for Men