Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2018 10:38:47 Hours

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு இராணுவத்தினால் கட்டப்பட்ட புதிய வீடு கையளிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 51 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 2 ஆவது கெமுனு ஹேவா படையணியினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு குடும்ப உறுப்பினருக்கு கையளிக்கப்பட்டன.

இந்த வீடு 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டதாரியான விஜயகுமார் சுலக்ஷன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காலமானார்.

இவரது குடும்பத்தினருக்கே இராணுவத்தினால் இந்த புதிய வீடுகள் நிர்மானித்து கையளிக்கப்பட்டன.

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் சிறைச்சாலை மறுசீரமைப்பின் கெளரவ அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் அவர்களினால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குரிய சுன்னாக பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதகான அஸ்திவாரம் சில மாதங்களுக்கு முன் வைக்கப்பட்டன.

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கமைய மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்களது தலைமையில் இந்த புதிய கட்டிட நிரமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் பிரதேச செயலகத்தின் பணிப்புரைக்கமைய கடந்த (7) ஆம் திகதி சனிக் கிழமை இந்த புதிய வீட்டின் திறப்புகள் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டன. Asics shoes | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092