11th July 2018 13:10:10 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைத் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசங்களில் ஜூன் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கணேசபுரம் பிள்ளையார் கோயில் வளாகம் 15 ஆவது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் சுத்தம் செய்யப்பட்டன. அதே தினம் 1 ஆவது கஜபா படையணியினால் கொடேகட்டியார்குளத்திலிருந்து அம்பலபெருமாள்குளம் வரைக்கான வீதியோரங்களில் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியினரால் ஒட்டாருத்தகுளம் ரதம் பாலர் பாடசாலை வளாகம் 150 படையினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்நிஷ்சங்க ரணவன அவர்களது பணிப்புரைக்கமைய 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றன.Best Authentic Sneakers | GOLF NIKE SHOES