09th July 2018 15:15:24 Hours
இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் ஏற்பாட்டில வருடாந்தம் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான ‘கெவல்ரி சுபர் குரொஸ்’ போட்டிகள் (8) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாங்கொல்ல மைதானத்தில் இடம்பெற்றன.
இலங்கையிலுள்ள சிறந்த மோட்டார் சைக்கிள் , கார் ஒட்டுனர்கள் இந்த போட்டியில் பங்கேற்றிக் கொண்டு தங்களது திறமைகளை வெளிக் காட்டினர்.
இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக இராணுவ படைக் கலச் சிறப்பணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
‘கெவல்ரி சுபர் குரொஸ்’ 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகளில் சிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனராக இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியைச் சேர்ந்த போர் வீரன் புத்திக சில்வா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த இராணுவ வீரனுக்கு இராணுவ தளபதியினால் வெற்றி கேடயங்கள் வழங்கி மேடையில் கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
short url link | Women's Nike Superrep