Header

Sri Lanka Army

Defender of the Nation

10th July 2018 16:22:25 Hours

புதிதாக பதவியேற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவ தளபதியின் வாழ்த்துகள்

இலங்கை இராணுவத்தில் அன்மையில் புதிதாக பதவி உயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் தரத்தைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் ஐவரை இராணுவ தளபதியின் பணிமனைக்கு (10) ஆம் திகதி அழைத்து இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேன்மை தங்கிள ஜனாதிபதியினால் 2018 ஆம் ஆண்டு 29 அம் திகதி ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கே இந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தற்பொழுது கிளிநொச்சி முன்னோக்கி பாதுகாப்பு பராமரிப்பு பகுதியின் கட்டளை தளபதியான இராணுவ போர் கருவி படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் எச். ஜி. ஐ வித்தியானந்த, 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான இராணுவ பொறியியலாளர் பயைணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டி.ஜே நாணயக்கார, இராணுவ ஆட்சேர்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகமான கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டீ.எம்.டப்ள்யூ.டப்ள்யூ.டப்ள்யூ.எம்.ஆர்.பீ.எம் தவுலகல, இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகமான இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் எஸ்கே திருநாவுக்கரசு, 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பி.ஆர் வனிகசூரிய போன்ற அதிகாரிகள் ஆவர்.

இராணுவ தளபதி இந்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இவர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.

affiliate link trace | Nike Off-White