10th July 2018 15:51:03 Hours
யாழ்ப்பாணத்திலுள்ள 52 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 523 ஆவது படைத் தலைமையகத்தின் ஒன்பதாவது வருடாந்த பூர்த்தி நிகழ்வினையிட்டு 91 இராணுவத்தினரது பங்களிப்புடன் இரத்ததானம் தலைமையகத்தில்(7) ஆம் திகதி சனிக் கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு யாழ் போதனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் ஒத்துழைப்பை வழங்கினர். அன்றைய தினம் படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் படைத் தலைமையகத்தில் வழங்கி படையினரால் கௌரவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பூர்த்தி நிகழ்வினையிட்டு 523 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் டிகரி திசாநாயக அவர்களது தலைமையில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை சமய ஆசிர்வாத, அன்னதான நிகழ்வுகள், இரத்த தானங்கள், கிரிக்கட் போட்டிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அத்துடன் நயினாதீவில் உள்ள நாக விகாரையில் சமய ஆசிர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன. Asics shoes | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers