09th July 2018 12:26:27 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது அறிவுறுத்தலின் படி வவுனியாவிலிருந்து 2018 ஆம் ஆண்டில் உயர்தர பரிட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு இரண்டு நாள் கருத்தரங்குகள் வவுனியா புதுக்குளம் மஹா வித்தியாலயத்தில் ஜூலை மாதம் 3 – 4 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
இந்த பயிற்சி பட்டறைகள் 611 ஆவது படைத் தலைமையகத்தின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றன. இந்த செயலமர்விற்கு இப் பிரதேசத்தைச் சேர்ந்த 175 மாணவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.
கணக்குகள், வணிகப் படிப்புகள், பொருளாதாரம், அரசியல் அறிவியல், புவியியல், தமிழ் மற்றும் இந்து கலாச்சாரம் போன்ற பாடங்களை உள்ளடக்கி இந்த கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கருத்தரங்கில் வவுனியா கல்வி வலயத்தின் கீழ் பணி புரியும் திருமதி சுரேந்திரன், திருமதி ஜயதீஷன் அவர்களால் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த கருத்தரங்கில் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜே திலகரத்ன, 611 ஆவது படைத் தளபதி கேர்ணல் எல்.டீ.எஸ்.எஸ் லியனகே அவர்களும் பங்கேற்றுக் கொண்டனர்.
Buy Kicks | Nike SB