Header

Sri Lanka Army

Defender of the Nation

09th July 2018 13:14:00 Hours

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை

கந்தளாய் பிரதேசத்தில் இருந்து2018 ஆம் ஆண்டிற்காக இம்முறை உயர்தர பரீட்சைக்குதோற்றவிருக்கும் மாணவர்களுக்கு 222 ஆவது படைத் தலைமையகத்தின் பூரண ஒத்துழைப்புடன் பயிற்சி பட்டறை (6) ஆம் திகதி கந்தளாய் மத்திய கல்லூரியில் இடம்பெற்றன.

இந்த பயிற்சி பட்டறைக்கு கந்தளாய் மத்திய கல்லூரி, அக்போபுர மத்திய கல்லூரி, அக்ரபோதி மத்திய கல்லூரி, கந்தலாவ மத்திய கல்லூரி, வானலை வித்தியாலயம் மற்றும் முள்ளிப்பொத்தானை வித்தியால பாடசாலையைச் சேர்ந்த 360 மாணவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

கந்தளாய் கல்வி வலய பணியகத்தின் கீழ் கடமை புரியும் இரத்தினபுர, எஸ்.எம்.என் பண்டார மற்றும் டப்ள்யூ.ஏ.சி.பி அரியவிமல போன்ற விரிவுரையாளர்களினால் இந்த பயிற்சி பட்டறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சி திட்டம் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது எண்ணக் கருவிற்கமைய 222 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் தீபால் புசெல்ல அவர்களது தலைமையில் 5 ஆவது பீரங்கிப் படையணியின் பங்களிப்புடன் இடம்பெற்றன. Adidas footwear | Men's Footwear