Header

Sri Lanka Army

Defender of the Nation

09th July 2018 11:03:36 Hours

விஜயபாகு காலாட் படையணிகளுக்கு இடையிலான வருடாந்த போட்டிகள்

விஜயபாகு காலாட் படையணிகளுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த போட்டிகள் ஜூலை மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் 05 ஆம் திகதி வரை போஜயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட்படை தலைமையக மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு ஜூலை மாதம் 03 ஆம் திகதி விஜயபாகு காலாட் படையணியின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் டப்ள்யூ.எஸ் ஆரியசிங்க அவர்களினால் தலைமையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டன.

விஜயபாகு காலாட் படையணியில் உள்ள 25 படையணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டன.

இந்த போட்டிகளில் 5 ஆவது விஜயபாகு காலாட் படையணி முதலாவது இடத்தையும், 18 ஆவது விஜயபாகு காலாட் படையணி இரண்டாவது இடத்தையும், 4 ஆவது விஜயபாகு காலாட் படையணி மூன்றாவது இடத்தையும் வகித்துள்ளது.

இந்த போட்டிகளில் பங்கு பற்றி சிறப்பான திறமைகளை வெளிக் காட்டிய விளையாட்டு வீரர் போர் வீரன் என். ஏ. ஆர் கருணாதிலக ஆவர்.

விஜயபாகு காலாட் படையணியின் 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த போட்டி பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு வெற்றி கிண்ணங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.Nike footwear | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today