07th July 2018 23:28:40 Hours
மாத்தளை நாவுளையில் அமைந்துள்ள இராணுவ விஷேட படையணி தலைமையகத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (7) ஆம் திகதி சனிக் கிழமை விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த இராணுவ தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதை செலுத்தியதன் பின்பு விஷேட படையணியின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா அவர்கள் இராணுவ தளபதியை வரவேற்றார்.
இந்த படைத் தலைமையக வளாகத்தினுள் படையினரது நலன்புரி நிமித்தம் அதிகாரபூர்வமற்ற பதவி தரங்களில் உள்ள படையினருக்கு உணவு விடுதி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா பௌத்த மத ஆசிர்வாதத்துடன் இராணுவ தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து இராணுவ தளபதியினால் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டன. பின்னர் படைத் தலைமையக வளாகத்தினுள் விஷேட படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டி நிகழ்விற்கும் பிரதம அதிதியாக இராணுவ தளபதி கலந்து கொண்டு பார்வையிட்டார். பின்பு வெற்றி பெற்ற படையணியின் தலைவர்கள் மற்றும் திறமைகளை வெளிக் காட்டிய வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். Mysneakers | UK Trainer News & Releases