Header

Sri Lanka Army

Defender of the Nation

06th July 2018 16:02:49 Hours

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக குழுவினர் இராணுவ தளபதியை சந்திப்பு

சிம்பாவே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 23 முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. வருகை தந்த இவர்கள் (6) ஆம் திகதி காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

சிம்பாவே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கட்டளைத் தளபதியான எயார் வைஸ் மார்ஷல் எம்.டி மாயோ தலைமையில் குழுவினர் இலங்கைக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டனர். இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த சிம்பாவே கட்டளை தளபதி உட்பட சிரேஷ்ட அதிகாரிகளை இலங்கை இராணுவ பயிற்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அருண வன்னியாரச்சி அவர்கள் வரவேற்றார்.

பின்னர் இராணுவ தளபதியின் பணிமனைக்கு வருகை தந்து சிம்பாவே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டளைத் தளபதி உட்பட சிம்பாவே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இலங்கை இராணுவ தளபதியுடன் இலங்கை நாட்டின் அனுபவம் மற்றும் பாடத்திட்டம் தொடர்பான கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ பயிற்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களும் இணைந்திருந்தார்.

Running sports | Nike Dunk - Collection - Sb-roscoff